LATEST
CLICK HERE
TO FOLLOW

Black Quarter

சப்பை நோய் (Black Quarter) மாடுகளைத் தாக்கும் தொற்று நோய்

 

நோயின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்

இந்நோய் நல்ல சதைப்பற்றுள்ள இளம் மாடுகளை இந்நோய் அதிக அளவில் தாக்கி
பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றது.

நோயின் அறிகுறிகள்

  • அதிக காய்ச்சல்
  • முன்கால் சப்பை மற்றும் பின்கால் சப்பை ஆகியவற்றில் சூடான வீக்கம். வீக்கத்தை அழுத்தும் போது நறநறவென சப்தம் கேட்கும்,
  • கால் நொண்டும் நடக்க சிரமப்படும்
  • நோய் கண்ட மாடுகள் ஒரு சில நாட்களில் இறக்கும் வாய்ப்பு அதிகம்.

நோய் பரவும் முறைகள்

  • நோய் கண்ட மாடுகளுக்கு உடனடியாக கால்நடை மருத்துவரைக்கொண்டு தக்க சிகிச்சை அளித்தால் இறப்பைத் தவிர்க்கும் வாய்ப்பு உள்ளது.
  • மழைக்காலத்திற்கு முன் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதே நோயினைத் தடுக்கம் சிறந்த வழியாகும். இந்நோய்க்கான தடுப்பூசி எல்லா அரசு கால்நடை நிலையங்களிலும் இலவசமாக போடப்படுகிறது.
  • நோய் பரவியுள்ள இடங்களிலிருந்து கால்நடைகளை வாங்கி வருவதைத் தவிர்க்க வேண்டும்.
  • நோயுள்ள கால்நடைகளை மற்ற கால்நடைகளுடன் சேர்க்காமல் பிரித்து வைக்க வேண்டும்.
  • நோயினால் இறக்கும் கால்நடைகளை ஆழமான குழியைத் தோண்டி புதைக்க வேண்டும்.

 

Announcements
21st Livestock Census 2024-25
05 Apr 2026
Free Veterinary Health Camp - January 2025
31 Mar 2026
Animal Ambulance Service - Dial 1962
26 Mar 2026
Subsidy for Dairy Farmers - Application Open
21 Mar 2026
1962
Animal Ambulance
24/7 Emergency Services
1800 425 5880
Toll Free Helpline