LATEST
CLICK HERE
TO FOLLOW

Haemorrhagic Septicaemia

தொண்டை அடைப்பான் நோய்

நோயின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்

இந்நோய் மாடுகள், ஆடுகள், பன்றிகள் ஆகியவற்றை தாக்கம் தொற்று நோயாகும்.
இந்நோய் கறவை மாடுகள், எடுமைகள், எருதுகள் மற்றும் ஆட்டினங்களை அதிகம் தாக்கி
பெரும் பொருளாதார மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகின்றது.

நோயின் அறிகுறிகள்

  • அதிக காய்ச்சல்
  • கழிச்சல்
  • இருமல்
  • மூச்சு விடுவதற்கு சிரமம்
  • மூக்கிலிருந்து சளி ஒழுகுதல்
  • தாடை (ம) கழுத்து பகுதிகளில் வீக்கம்

இந்நோய் தாக்கிய மாடுகள் ஓரிரு நாட்களின் இறக்க நேரிடு. இந்நோய் எருமைகளில்
அதிக பாதிப்பை உண்டாக்கும்.

நோய் பரவ சாதகமான சூழ்நிலைகள்

  • தட்ப வெப்ப நிலையில் திடீர் மாற்றம்
  • அதிக தூரம் பயணம்
  • நோய் தாக்கிய இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட மாடுகள்
  • சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு

நோய் பரவும் விதம்

  • இந்நோய் நோயற்ற மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது.
  • சாதாரணமாக மாடுகளின் தொண்டை மற்றும் மூக்கு பகுதிகளில் நோய்க்கிருமிகள் தங்கியிருக்கும்.
  • இந்நோய்க் கிருமிகள் மேற்சொன்ன சாதகமான சூழ்நிலைகளில் நோயை உண்டாக்கும்
  • நோயுற்ற கால்நடைகள் உட்கொண்ட தீவனத்தின் மீதம் மற்றும் அதன் எச்சில் மூலம் இந்நோய் அதிக அளவில் மற்ற மாடுகளுக்கு எளிதில் பரவும்.

நோய் தடுப்பு முறைகள்

  • நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • இந்நோய் பொதுவாக மழைக்காலங்களில் அதிக அளவில் தாக்குவதால் அதற்கு முன்பு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். இந்நோய்க்கான தடுப்பூசி எல்லா அரசு கால்நடை நிலையங்களிலும் இலவசமாக போடப்படுகிறது.
  • கொட்டகைகள் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும்
  • புதிதாக வாங்கிய மாடுகளை குறைந்தது ஒரு வாரங்கள் தனியே வைத்து நோய் எதும் இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே கொட்டகையில் சேர்க்க வேண்டும்.
Announcements
21st Livestock Census 2024-25
05 Apr 2026
Free Veterinary Health Camp - January 2025
31 Mar 2026
Animal Ambulance Service - Dial 1962
26 Mar 2026
Subsidy for Dairy Farmers - Application Open
21 Mar 2026
1962
Animal Ambulance
24/7 Emergency Services
1800 425 5880
Toll Free Helpline