நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவு (MVUs)
தொலைதூர கிராமங்களுக்கு கால்நடை சேவைகளை அதிக அளவில் வழங்குவதற்காக நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன. நடமாடும் கால்நடை மருத்துவமனைகளாக செயல்படும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்ட நான்கு சக்கர வாகனம் பயன்படுத்தப்படுகிறது. நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளில் உள்ள முக்கிய வசதிகள்:
- நோய் கண்டறிதல், சிகிச்சை கருவிகள்
- சிறு அறுவை சிகிச்சை கருவிகள்
- மாதிரிகள் சேகரிப்பு
- திரவ நைட்ரஜன் கொள்கலன், தடுப்பூசி கொள்கலன்
- சிறிய அளவிலான குளிர்சாதன பெட்டி
- மாட்டின இனப்பெருக்க உள்ளீட்டு கருவிகள்
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை மருத்துவ சிகிச்சை உதவியாளர் மற்றும் ஒரு ஊர்தி ஓட்டுநர் பணிபுரிய இடம் இருக்கும்.
செயல்பாடுகள் மற்றும் சேவைகள் வழங்கல்
அழைப்பு மையம் (1962) 24×7 இயங்குகிறது மற்றும் செயல்பாட்டு நேரங்களில் MVU களை வழிநடத்துகிறது.
MVU வேலை நேரம் :
- காலை 8:00 – பிற்பகல் 2:00 (திங்கள்–சனி) : அதிக கால்நடை எண்ணிக்கை உள்ள கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
- பிற்பகல் 2:00 – மாலை 5:00 : 1962 அழைப்பு மையத்தின் வழிகாட்டுதலின்படி அவசர சேவைகள் வழங்கப்படும்.
- ஞாயிற்றுக்கிழமைகளில்: 1962 இலவச எண்ணின் மூலம் ஒதுக்கப்பட்ட இடத்தில் நடமாடும் மருத்துவ ஊர்திகள் சிகிச்சையளிக்கப்படும்.
வழித்தடத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள்:
- மருத்துவ பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி
- சிறு அறுவை சிகிச்சைகள்
- செயற்கைமுறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலட்டுத்தன்மை சிகிச்சை
- விரிவாக்க நடவடிக்கைகள்
- மாதிரி பொருள் சேகரிப்பு
கூடுதல் சேவைகள்:
- அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு தொகை காணொலி கருவி, ஒலிப்பெருக்கி, திரை, மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- இவை கால்நடை வளர்ப்பு விழிப்புணர்வு மற்றும் விரிவாக்க பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
- 1962 இலவச எண்ணின் மூலம், அழைப்பு மையத்தின் உதவியுடன் தொலை மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
மாவட்ட வாரியாக நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு
| வ.எண். | மண்டலம் | MVU ஒதுக்கீடு | கால்நடை ஆம்புலன்ஸ் |
|---|---|---|---|
| 1 | அரியலூர் | 5 | 1 |
| 2 | கோயம்புத்தூர் | 6 | 1 |
| 3 | கடலூர் | 8 | 1 |
| 4 | தர்மபுரி | 7 | 1 |
| 5 | திண்டுக்கல் | 8 | 1 |
| 6 | ஈரோடு | 10 | 1 |
| 7 | காஞ்சிபுரம் | 8 | 2 |
| 8 | கன்னியாகுமரி | 2 | 1 |
| 9 | கரூர் | 7 | 1 |
| 10 | கிருஷ்ணகிரி | 8 | 1 |
| 11 | மதுரை | 6 | 1 |
| 12 | நாகப்பட்டினம் | 8 | 1 |
| 13 | நாமக்கல் | 9 | 1 |
| 14 | பெரம்பலூர் | 3 | 1 |
| 15 | புதுக்கோட்டை | 10 | 1 |
| 16 | இராமநாதபுரம் | 8 | 1 |
| 17 | சேலம் | 16 | 1 |
| 18 | சிவகங்கை | 8 | 1 |
| 19 | தஞ்சாவூர் | 8 | 1 |
| 20 | நீலகிரி | 1 | 1 |
| 21 | தேனி | 3 | 1 |
| 22 | தூத்துக்குடி | 7 | 1 |
| 23 | திருச்சிராப்பள்ளி | 10 | 1 |
| 24 | திருநெல்வேலி | 9 | 1 |
| 25 | திருப்பூர் | 9 | 1 |
| 26 | திருவள்ளூர் | 6 | 1 |
| 27 | திருவண்ணாமலை | 12 | 1 |
| 28 | திருவாரூர் | 5 | 1 |
| 29 | வேலூர் | 11 | 1 |
| 30 | விழுப்புரம் | 16 | 1 |
| 31 | விருதுநகர் | 11 | 1 |
| மொத்தம் | 245 | 32 | |
TO FOLLOW