LATEST
CLICK HERE
TO FOLLOW

Feeding Fodder to Livestock

கால்நடைகளுக்கு தீவனம் அளித்தல்

கால்நடைகளின் தீவனம் உட்கொள்ளும் அளவு அதன் உடல் எடை, வயது, உற்பத்தித்திறன் ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். அது மட்டுமின்றி தீவனத்தின் தன்மை, சுற்றுப்புற வெப்பநிலை, கால்நடைகளின் உடல் நலன் ஆகியவற்றை பொறுத்தும் அமையும். ஆரோக்கியமான உடல் நலத்திற்கு சுகாதாரமான குடிநீர் எப்பொழுதும் கால்நடைகளுக்கு கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

சினை மாடுகளுக்கு தீவனம் அளித்தல்

மாடுகளின் அன்றாட உடல் பராமரிப்பிற்கு 1.5 கிலோ கலப்பு தீவனம் தேவைப்படுகிறது. சினைக்காலத்தில் முதல் 6 மாத காலத்திற்கு ஊட்டச்சத்து அதிகளவில்
தேவைபடாது. இருந்த போதிலும் பசுந்தீவனம் அளிப்பது முக்கியமாகும். கடைசி மூன்று மாத சினை காலத்தில் 1.0 – 1.5 கிலோ கலப்பு தீவனம் கூடுதலாக அளிக்க வேண்டும். கன்று ஈனுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பும் பின்பும் சாணம் இலக்கியாக தவிடு மற்றும் பசுந்தீவனம் அளிக்க வேண்டும்.

கறவை மாடுகளுக்கு தீவனம் அளித்தல்

கறவை மாடுகள் தனது உடல் எடையில் 2.5 முதல் 3 விழுக்காடு வரை தீவன உலர் பொருள் உட்கொள்ளும் கறவை மாடுகளின் உடல் பராமரிப்பிற்குத் தேவைப்படும் கலப்புத் தீவனத்திற்கு (1.5-2.0 கிலோ) கூடுதலாக ஒவ்வொரு லிட்டர் பால் உற்பத்திக்கும் 300-250 கிராம் கலப்பு தீவனம் கொடுக்க வேண்டும். கறவை மாட்டின் சராசரி பால் உற்பத்தியை அறிய கலப்பு தீவனத்தை தேவையான அளவிற்கு மேல் 1.2 கிலோ வரை அதிகரித்து பால் உற்பத்தி கூடுகிறதா என்று பார்க்க வேண்டும். பால் அளவு அபரிதமாகக் கூடாவிட்டால் நிர்ணயித்த தேவையைப் பூர்த்தி செய்தால் போதுமானது. கன்று ஈன்ற பின்பு கலப்பு தீவனத்தைப் படிப்படியாக அதிகரிக்கச் செய்வதுடன் உலர் தீவனமாக தரமான தட்டு வகைகளை அளிக்க வேண்டும்.

பசுந்தீவனம் கறவை மாடுகளுக்கு அளிப்பது மிகவும் அவசியம். நாள் ஒன்றிற்கு 20.40 கிலோ பசுந்தீவனம் தேவைப்படும் பயறுவகை பசுந்தீவனமாக இருக்கும் பட்சத்தில் நார்ச்சத்து மிக்க உலர் தீவனத்தில் கால் பங்கு அளவு மட்டும் அளிக்கப்பட வேண்டும் அல்லது பசுந்தீவனத்தில் பாதியளவு வரை அளித்து கலப்புத் தீவன அளவைக் குறைத்துக் கொள்ளலாம். நாளொன்றிற்கு 3.5 கிலோ உலர்ந்த தீவனமாகிய வைக்கோல் மற்றும் தட்டு வகைகளை அளிப்பதால் மாடுகள் உணவு உட்கொண்ட திருப்தியை அடைகின்றன.

மாதிரி கலப்பு தீவன கலவை

மூலப் பொருட்கள் சதவிகிதம்
தானியங்கள் 30-40
தவிடு 30-40
புண்ணாக்கு தாது உப்புக்கலவை 20-25
சாதா உப்பு  
Announcements
21st Livestock Census 2024-25
05 Apr 2026
Free Veterinary Health Camp - January 2025
31 Mar 2026
Animal Ambulance Service - Dial 1962
26 Mar 2026
Subsidy for Dairy Farmers - Application Open
21 Mar 2026
1962
Animal Ambulance
24/7 Emergency Services
1800 425 5880
Toll Free Helpline