LATEST
CLICK HERE
TO FOLLOW

Using Azolla as Livestock Feed

அசோலாவை கால்நடை தீவனமாக உபயோகித்தல் 

அசோலாவை மாட்டுத் தீவனமாக பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன்படுத்தலாம். அதிக புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்களும் உள்ளது. கால்நடைகளுக்கு அசோலாவை கோதுமை, வைகோலுடன் சேர்த்து அளித்ததில் கால்நடைகளின் எடையும் வளர்ச்சியும் அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

அசோலா கால்நடை தீவனம் உற்பத்தி

தேவையான பொருட்கள் (ஒரு குழிக்கு)

செங்கல் : 30-40 கற்கள்
சில்பாலின் பாய் : 2.5 மீ நீளம் 1.5மீ அகலம் அளவு (அ) 6 9 3 9
செம்மண் : 30 கிலோ / ஒரு குழிக்கு
புதிய சாணம் : 3 கிலோ / ஒரு குழிக்கு
சூப்பர் பாஸ்பேட் : 30 கிராம் / ஒரு குழிக்கு
ஐசோபேட் : 10 கிராம் / ஒரு குழிக்கு
தண்ணீர் அளவு : 10 செ.மீ. உயரம்
அசோலா விதை : 300 – 500 கிராம் / ஒரு குழிக்கு
யூரியா சாக்கு : தேவையான எண்ணிக்கை

அசோலா செய்முறை

  •  முதலில் சுத்தமான இடம் மற்றும் மர நிழலும், வெயிலும் (நேரடி சூரிய ஒளி 3 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது) இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும்.
  • குழியின் அளவு 6 அடி நீளம் 3 அடி அகலம் இருக்க வேண்டும்.
  • புல் பூண்டுகள் வளருவதைத் தடுக்க யூரியா சாக்கினை குழியில் பரப்பவும். பின் செங்கல் குறுக்கு வாட்டில் குழிளைச் சுற்றி வைக்க வேண்டும்.
  • அதன் மேல் சில்பாலின் பாயை ஒரே சீராக பரப்பிவிட வேண்டும். ஒரே சீரான பள்ளமாக இருக்க வேண்டும்.
  • சில்பாலின் பாயின் மீது 30 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பிவிட வேண்டும்.
  • புதிய சாணம் 2 கிலோ தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
  • பின்னர் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீரில் கலந்து குழியில் ஊற்ற வேண்டும்.
  • தண்ணீரின் அளவு 10 செ.மீ. உயரம் வரும் வரை சுமார் 6 முதல் 9 குடம் ஊற்ற வேண்டும். ஊற்றுவது குடிநீராக இருக்க வேண்டும்.
  • கடைசியாக 250 – 500 கிராம் சுத்தமான அசோலா விதைகளை குழியில் போட வேண்டும். அதன் மேல் லோசாக தண்ணீர் தெளிக்கவும்.
  • விதைத்த மூன்று நாட்களில் எடை மூன்று மடங்காக பெருகும்.
  • பசுந்தீவனம் (அசோலா) 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்க தயாராக இருக்கும்.
  • 15 நாட்கள் கழித்து நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

 

Announcements
21st Livestock Census 2024-25
05 Apr 2026
Free Veterinary Health Camp - January 2025
31 Mar 2026
Animal Ambulance Service - Dial 1962
26 Mar 2026
Subsidy for Dairy Farmers - Application Open
21 Mar 2026
1962
Animal Ambulance
24/7 Emergency Services
1800 425 5880
Toll Free Helpline