சப்பை நோய் (Black Quarter) மாடுகளைத் தாக்கும் தொற்று நோய்
நோயின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்
இந்நோய் நல்ல சதைப்பற்றுள்ள இளம் மாடுகளை இந்நோய் அதிக அளவில் தாக்கி
பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றது.
நோயின் அறிகுறிகள்
- அதிக காய்ச்சல்
- முன்கால் சப்பை மற்றும் பின்கால் சப்பை ஆகியவற்றில் சூடான வீக்கம். வீக்கத்தை அழுத்தும் போது நறநறவென சப்தம் கேட்கும்,
- கால் நொண்டும் நடக்க சிரமப்படும்
- நோய் கண்ட மாடுகள் ஒரு சில நாட்களில் இறக்கும் வாய்ப்பு அதிகம்.
நோய் பரவும் முறைகள்
- நோய் கண்ட மாடுகளுக்கு உடனடியாக கால்நடை மருத்துவரைக்கொண்டு தக்க சிகிச்சை அளித்தால் இறப்பைத் தவிர்க்கும் வாய்ப்பு உள்ளது.
- மழைக்காலத்திற்கு முன் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதே நோயினைத் தடுக்கம் சிறந்த வழியாகும். இந்நோய்க்கான தடுப்பூசி எல்லா அரசு கால்நடை நிலையங்களிலும் இலவசமாக போடப்படுகிறது.
- நோய் பரவியுள்ள இடங்களிலிருந்து கால்நடைகளை வாங்கி வருவதைத் தவிர்க்க வேண்டும்.
- நோயுள்ள கால்நடைகளை மற்ற கால்நடைகளுடன் சேர்க்காமல் பிரித்து வைக்க வேண்டும்.
- நோயினால் இறக்கும் கால்நடைகளை ஆழமான குழியைத் தோண்டி புதைக்க வேண்டும்.
TO FOLLOW